கட்டாரிலுள்ள இலங்கையர்களின் குடியிருப்புக்கள் தீக்கிரை!!

849

Fire

கட்டார் நாட்டில் இலங்கையர்கள் தங்கியிருந்த குடியிருப்புப் பகுதியில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை அந்த நாட்டிலுள்ள துப்புரவுத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்கள் தங்கியிருந்த குடியிருப்பிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும் தீயினால் இலங்கையர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் தீப் பரவல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நிர்க்கதியாகியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கூறியுள்ளது. இவர்கள் தற்போது முகாம் ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் குறித்து ஆராய கட்டாருக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.