மே-18 போரில் இறந்தவர்களின் நினைவு தினம் : அரசாங்கம் அறிவிப்பு!!

508

May

இலங்கையின் முன்னாள் அரசாங்கத்தினால் வெற்றி விழாவாக கொண்டாடப்பட்டு வந்த மே 18ஆம் திகதி இம்முறை போரினால் கொல்லப்பட்டவர்களின் நினைவு தினமாக அனுஸ்டிக்கப்படவுள்ளது.

2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி விடுதலைப்புலிகளை வெற்றி கொண்டதன் அடிப்படையில் அந்த நாளை ராஜபக்ச அரசாங்கம் வெற்றிவிழாவாக கொண்டாடி வந்தது.

எனினும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு குறித்த தினத்தை படைவீரர் தினம் என்ற பெயரில், போரினால் இறந்தவர்களின் தினமாக நினைவுக்கூர புதிய அரசாங்கம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்நிகழ்வு இம்மாத இறுதியில் மாத்தறையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.