பெண் வர்த்தகர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை!!

1113

Murder

பாணந்­துறை ஹிரண பகு­தி­யி­லுள்ள வர்த்­தக நிலை­ய­மொன்­றுக்குள் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வர்த்­தக நிலைய உரி­மை­யா­ள­ரான 45 வய­தான பெண் ஒரு­வரே இவ்­வாறு கொலை செய்யப்பட்டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குணசே­கர குறிப்­பிட்டார். குறித்த பெண்ணை கொலை செய்­த­வரை பொலிஸார் அடை­யாளம் கண்டுள்ளதாகவும் அவரை தேடி விசேட பொலிஸ் குழு­வொன்று கட­மையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள­தா­கவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

குறித்த வர்த்­தகப் பெண் நேற்­றி­ரவு வர்த்­தக நிலை­யத்­தி­லி­ருந்து வீடு திரும்­பா­ததால் உற­வி­னர்கள் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ள­தை­ய­டுத்தே சட­ல­மா­னது நேற்று அவ­ரது வர்த்­தக நிலை­யத்­துக்குள் இருந்து மீட்­கப்­பட்­டது. உடலின் பல்­வேறு இடங்­க­ளிலும் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்­கப்­பட்­ட­மைக்­கான அடை­யாளங்கள் காணப்­பட்­டன.

இதற்­க­மைய விசா­ர­ணை­களை ஆரம்­பித்த பொலிஸார் சம்­பவ இடத்­துக்கு பொலிஸ் மோப்ப நாயான கிரே­ரோவை கொண்டு­வந்து தட­யங்­களை சேக­ரித்­தனர். அதன்­படி அந்த மோப்­ப­நா­யா­னது அக்­க­டை­யி­லி­ருந்து ஒரு கிலோ­மீற்றர் தூரத்­துக்கு அப்பால் உள்ள மருந்­த­கத்­துக்கு அருகில் போய் நின்­று­ள்­ளது.

இது தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட போது கொலை செய்யப்­பட்­டுள்ள பெண்­ணுக்கும் அந்த மருந்­த­கத்தின் உரி­மை­யா­ள­ருக்கும் இடையே இர­க­சிய தொடர்பு இருந்து வந்­துள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. இந் நிலையில் குறித்த நபரை பொலிஸார் தேடிய போதும் அவர் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருப்பது தெரியவரவே சந்தேகத்தின் அடிப்படையில் அவரை தேடி சிறப்பு பொலிஸ் குழு விசாரணைகளை தொடர்கின்றது.