வவுனியா உக்கிளாங்குளம் பிரதேசத்தில் இரண்டு ஆலயங்களில் திருடர்கள் அட்டகாசம்!

528

410

வவுனியா உக்கிளாங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் (உக்கிளாங்குளம் பிள்ளையார் கோவில்) மற்றும் மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் தேவஸ்தானம் (உக்கிளாங்குளம் சிவன் கோவில்) என்பனவற்றுக்குள் நேற்று (10.05.2015 ஞாயிற்றுக்கிழமை) இரவு திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளன .

மேற்படி ஆலயங்களின் உண்டியல்கள் மற்றும் அலுவலகங்கள் உடைக்கப்பட்டு திருடர்கள் அங்கிருந்த பொருட்கள் மற்றும் பணத்தை களவாடிச் சென்றுள்ளதோடு, உக்கிளாங்குளம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் மூலஸ்தான கர்ப்பக்கிரகத்தில் இருந்த விநாயகர் சிலையை தகர்த்து அதன் கீழ் இருந்த தகடுகளையும் களவாடிச் சென்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். மேற்படி சம்பவங்கள் தொடர்பாக வவுனியா பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.