வட மாகாணசபையின் புதிய உறுப்பினராக பதவியேற்ற வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.நடராஜாவை வரவேற்கும் நிகழ்வு நேற்று(10.05.2015 ஞாயிற்றுக்கிழமை) வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போனஸ் ஆசன உறுப்பினராக சுழற்சி முறையில் இரண்டாவது வருடத்திற்காக தெரிவு செயய்ப்பட்டுள்ள முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரி எம்.பி.நடராஜ், மற்றும் வருகை தந்த அதிதிகள் மக்கள வாத்திய இசையுடன் நகரசபை வாயில் முன்பாகவிருந்து வரவேற்கப்பட்டு அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், இந்திய துணைத்தூதுவர் ரி.மூர்த்தி, வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலளார் சி.பாஸ்கரா, மாகாணசபை உறுப்பினர்களான இ.இந்திரராஜா, ஜி.ரி.லிங்கநாதன், எம்.தியாகராசா, க.சிவனேசன், சி.சிவமோகன், க.சர்வேஸ்வரன், து.ரவிகரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வன்னி அமைப்பாளர் எஸ்.கோவிந்தராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலச்சந்திரன், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வடமாகாணசபை போனஸ் ஆசன உறுப்பினராக இருந்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மேரிகமலா குணசீலன் கடந்த மார்ச் மாதம் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.