வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை நிறுத்தகோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

664

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலரின் இடமாற்றத்தை நிறுத்தக்கோரி செட்டிகுளத்தில் இன்று மக்கள் ஒன்றிணைந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செட்டிகுளம் பிரதேச கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இனமத பேதமின்றி சுமார் 300 இற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

செட்டிகுளம் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து மன்னார் மதவாச்சி வீதி வழியாக செட்டிகுளம் பிரதேச செயலகம் வரை ஊர்வலமாக சென்ற பொது மக்கள் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ‘எமது பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை உடன் நிறுத்து’, ‘மாற்றாதே மாற்றாதே பிரதேச செயலரை மாற்றாதீர்’, ‘இனமத பேதமற்ற சேவையாளனை இடம்மாற்றாதீர்’ போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினா்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பிரதேச செயலாளரை மாற்றம் செய்ய வேண்டாம் என கோரி ஜனாதிபதி மற்றும் வவுனியா அரசாங்க அதிபருக்கு ஒப்படைப்பதற்காக செட்டிகுளம் உதவி திட்ட பணிப்பாளாரிடம் மகஜரொன்றினையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வழங்கியிருந்தனர்.

11 12 13 14