நான்காவது முறையாக நேபாளத்தில் நிலநடுக்கம் : சென்னையும் அதிர்ந்தது!!(படங்கள்)

346

நேபாளம், இந்தியா, ஆப்பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

7.4 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பூமியதிர்ச்சி இன்று நண்பகல் 12.40 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இந்த பூமியதிர்ச்சியால் இந்தியாவின் தலைநகர் டெல்லி உட்பட வடக்கு இந்தியாவின் பல பிரதேசங்களில் உணரப்பட்டுள்ளதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

டெல்லி புறநகர், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், பிஜி தீவு, ஜப்பான், சிலியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது என புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நேபாளத்தில் நான்காவது தடவையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் உள்ள அனைத்து இலங்கையரும் கடந்த பூகம்பத்தோடு நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் மீதமுள்ள இலங்கையரும் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக நேபாளத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இன்று ஏற்பட்ட பூகம்பத்தினால் இலங்கை தூதரக கட்டிடம் சிறிய தேசமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் இலங்கைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் டில்லி, பீகார், உத்திரபிரதேசம், மேற்குவங்கம், அசாம் , தமிழகம், கேரளா, ஒடிசா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அதிர்வு ஏற்பட்டது.

உலகம் முழுவதும் 82 இடங்களில் நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வந்துள்ளது. சேதம் குறித்து எவ்வித தகவலும் இல்லை. கடந்த 25ம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இதன் எதிரொலி வட இந்தியா முழுவதும் இருந்தது. பீகாரில் பலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இன்று மதியம் 12.45 மணிக்கு நேபாளத்தின் தென்கிழக்கு பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 7. 1 ரிக்டர் அளவாக, ஆப்கானிஸ்தானில் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதுபோல் ஆப்கான், இந்தோனேஷியா, சீனாவிலும் இன்று நில நடுக்கம் பாதித்துள்ளது.

இந்நேரத்தில் டில்லியில் கட்டடங்கள் குலுங்கின. பலரும் குடியிருப்பில் இருந்து வெளியேறினர். சென்னையில் சாந்தோம், சூளைமேடு, பெசன்ட்நகர், கோடம்பாக்கத்தில் வீடுகள் அதிர்ந்தததாக இங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.

23 22 21 20