வவுனியாவில் இன்று(12.05) மதியம் முதல் பலத்த மழை பெய்து வருகின்றது. இம் மழையினால் வவுனியா நகரமே வெள்ளக் காடு போல் காட்சியளிக்கின்றது.
வவுனியாவில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் கடுமையான மழை பெய்து வருவதாகவும் பெருமவளான வீதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாகவும் இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
எமக்கு கிடைத்த தகவல்களின் பிரகாரம் வவுனியா நகரில் இரண்டாம் குறுக்கு தெரு மற்றும் கோரவபொத்தன வீதி மற்றும் கண்டிவீதி தாண்டிக்குளம் விவசாய கல்லூரி புதிய பேருந்து தரிப்பிடம் அமைந்துள்ள பகுதிகளில் கடுமையான வெள்ளம் வீதிகளை மூடி பாய்வதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர் . அத்துடன் வவுனியா புளியங்குளம் ஓமந்தை கனகராஜன் குளம் ஆகிய பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .