நேற்றைய தினம் (12.05) பிற்பகல் வேளையில் சுமார் மூன்றுமணிநேரம் விடாது பெய்த மழை காரணமாக வவுனியா குளத்தின் நீர் வரத்து சடுதியாக அதிகரித்தனைத் தொடர்ந்து குளம் நிரம்பி நேற்று இரவு முதல் வான்பாய்ந்து வருகிறது.
வவுனியா குளம் நிரம்பியதை அடுத்து வவுனியா கண்டி வீதியில் விவசாயக் கல்லூரியை சூழவுள்ள பகுதிகள் வெள்ளத்தில் காணப்படுகின்றன.
வான் பாயும் வவுனியா குளத்தைப் பார்வையிட பெருமளவான மக்கள் அங்கு திரண்டுள்ளனர்.
படங்கள் :கஜன்