ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட நாடுகள் என்ற அடிப்படையில் இலங்கையும் தாய்லாந்தும் அரசியல் ரீதியில் வலுப்பெற்று செயற்பட வேண்டும் என தாய்லாந்து பிரதமர் யின்லக் சின்வாத்ரா தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (31) இலங்கை வந்த தாய்லாந்து பிரதமர்- இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் உரையாற்றியபோNது இவ்வாறு கூறினார்.
தமது உரையில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையும் தாய்லாந்தும் ஜனநாயக அரசாட்சி நடத்தும் இரண்டு நாடுகள் என்றபோதும் இரு நாட்டு ஜனநாயக ஆட்சிக்கும் சில சமயங்களில் அழுத்தங்கள் காணப்பட்டன .
இலங்கையும் தாய்லாந்தும் புத்த தர்மத்தை கடைப்பிடிக்கும் நாடுகள் என்ற காரணத்தினால் புத்த தர்மத்தை வலுவடையச் செய்து அணுகூலமான வாழ்க்கையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக மொத்த சனத் தொகையில் 60 வீத மக்கள் ஆசிய வலயத்தில் வாழ்கின்றனர். இந்த மக்களின் வசதிகளை மேம்படுத்துவதற்காக போக்குவரத்து கட்டமைப்பை அபிவிருத்தி செய்ய வேண்டும் என தாய்லாந்து பிரதமர் கூறினார்