44 வருடங்களாக விளையாட்டுப் பொருள் மூக்கில் சிக்கியுள்ளதை அறியாதிருந்த நபர்!!

320

44

44 வருட கால­மாக தனது மூக்கில் இறப்­ப­ரா­லான விளை­யாட்டுப் பொருளின் ஒரு பகுதி சிக்­கி­யி­ருப்­பதை அறி­யாது நப­ரொ­ருவர் வாழ்ந்த சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

கம்­பெர்லி பிராந்­தி­யத்தில் வசிக்கும் ஸ்டீவ் ஈஸ்டன் என்ற நபரே இவ்­வாறு விளை­யாட்டுப் பொருளின் ஒரு பகுதி மூக்கில் பல வருட கால­மாக சிக்­கிய நிலையில் வாழ்ந்­துள்ளார்.
அவர் 1970 களில் 7 வயது சிறு­வ­னாக இருந்த போது விளை­யாட்டுத் துப்­பாக்­கியால் சுடு­வ­தற்கு பயன்­படும் இறப்­ப­ரா­லான அந்த பொருளை கையில் எடுத்து விளை­யா­டிய போது, அது அவ­ரது மூக்­கினுள் தவ­று­த­லாக உறிஞ்­சப்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்ட ஸ்டீவின் நாசித் துவா­ரத்தில் ஊடு­ரு­வி­யி­ருந்த அந்த இறப்பர் விளை­யாட்டுப் பொருளின் தண்டு வடி­வ­மான பகுதி மருத்­து­வர்­களால் அகற்­றப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் அதன் எஞ்­சிய வட்­ட­மான பகுதி அவ­ரது நாசித் துவா­ரத்தில் தொடர்ந்து இருப்­பதை மருத்­து­வர்கள் அறி­ய­வில்லை.

இந்­நி­லையில் பல வரு­டங்­க­ளாக மூக்­க­டைப்பால் துன்­பப்­பட்டு வந்த அவர், தனக்கு சளியால் மூக்கு அடைத்­துள்­ள­தாகவே கருதி வந்­துள்ளார்.

ஆனால் அண்­மையில் அவர் தும்­மிய போது அந்த இறப்­ப­ரா­லான விளையாட்டுப் பொருளின் எஞ்­சிய பகுதி வெளியேறியதையடுத்தே தான் இத்தனை வருட காலமாக அநாவசியமாக துன்பப்பட்டு வந்துள்ளதை அவர் அறிந்துள்ளார்.