வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வரி மதிப்பீடு செய்யுமாறு வரி ஏய்ப்பாளர்கள் கோரிக்கை!!

414

Vavuniya-UC

நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வரி மதிப்பீடுகளில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாக வரி ஏய்ப்பாளர் சங்கம் தெரிவித்துள்ள நிலையிலேயே புதிய வரி மதிப்பீடு செய்யப்படவேண்டும் என வரி ஏய்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை 2009 ஆம் ஆண்டு செய்யப்பட்ட வரி மதிப்பீடுகளின் பிரகாரம் வவுனியா நகரப்பகுதியில் வரி மதிப்பீடுகள் செய்யப்படவில்லை எனவும் தற்போதைய வரி அறவீட்டில் முரண்பாடுகள் உள்ளதாகவும் குற்றச்சாட்டுக்களை வட மாகாண சுகாதார அமைச்சர் உட்பட்ட வட மாகாணசபை உறுப்பினர்களிடம் வரி ஏய்ப்பாளர்கள் சங்கம் முன்வைத்துள்ள நிலையில் இக் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா நகரசபையில் வரி அறவீடுகள் மற்றும் வரி மதிப்பீடுகளில் முரண்பாடுகள் உள்ளதாக வரி ஏய்ப்பாளர் சங்கம் வட மாகாண சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் வட மாகாண முதலமைச்சருடன் வவுனியா நகர வரியிறுப்பாளர்களை சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாக வட மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.