வடக்கில் உயிர் இழந்த பொதுமக்களுக்கான நினைவுகூரலை தடுக்கக்கூடாது : மாது­லு­வாவே சோபித தேரர்!!

221

maduluwawe-sobitha

யுத்­தத்தில் உயிர் நீத்த இரா­ணுவ வீரர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­து­வதைப் போல் வடக்கில் உயிர் இழந்த பொது­மக்­க­ளையும் நாம் நினைவு கூர­வேண்டும். தமிழ் மக்­களை மட்டும் தடுப்­பது அவர்களின் உரி­மை­க­ளையும் உணர்­வு­க­ளையும் பறிக்கும் செயல் என சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் தலை­வ­ர் மாது­லு­வாவே சோபித தேரர் தெரி­வித்தார்.

யுத்­தத்தில் உயிர் இழந்த பொது­மக்­களை நினை­வு­கூ­ரு­வதில் தடைகள் இருக்­கின்ற நிலையில் அது தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

கடந்த மூன்று தசாப்­பத கால­மாக நாட்டில் இடம்­பெற்ற பயங்­க­ர­வாதம் நாட்டை தேசிய ரீதியில் பிளவு படுத்­தி­யது. இன ரீதி­யான முரண்­பா­டுகள் தோன்றி இன்று வரை இனப் பிரச்­சினை வேரூன்றி இருப்­ப­தற்கு பயங்­க­ர­வா­தமே பிர­தான கார­ண­மாகும் . அவ்­வா­றான நிலை­மையில் பயங்கரவாதத்தில் இருந்து இந்த நாடு விடு­பட்­டுள்­ள­ளது. ஆயுதப் போராட்டம் முற்­றாக முடி­வுக்கு கொண்­டு­வந்த பின்­னரும் கடந்த ஐந்து ஆண்­டு­களில் தொடர்ச்­சி­யாக யுத்த வெற்­றியை மற்­றுமே சுட்­டிக்­காட்டி அர­சாங்கம் ஆட்சி செய்­தது.

ஆயுத போராட்டம் வடக்கில் மக்­க­ளி­டையே மிகப்­பெ­ரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த நிலையில் தொடர்ச்­சி­யாக அம்­மக்­களை பயங்­க­ர­வா­தி­க­ளாக சுட்டிக் காட்டி இன­வாத அர­சி­யலை முன்­னைய தலை­வர்கள் கையாண்­டார்கள். இந்த நிலை­மையில் தான் கடந்த ஆறு யுத்த வெற்றி தினங்­களும் கொண்­டா­டப்­பட்­டன. ஆனால் புதிய அர­சாங்கம் இம்­முறை மே 19 ஆம் திகதியை யுத்த வெற்றி தின­மாக கொண்­டா­டாது இரா­ணுவ வீரர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்தும் தின­மாக அனுஷ்­டிக்க நினைத்­தி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­கது.

அதே­வேளை வடக்கில் யுத்­ததில் உயிர் இழந்த பொது­மக்­க­ளையும் நாம் நினைவு கூர வேண்டும். விடு­தலைப் புலிகள் நாட்டில் பயங்­க­ர­வாத செயல்­களை செய்­தாலும் அது வடக்கில் பொதுமக்களையே பாதித்­தன. கடந்த அர­சாங்­கத்தில் யுத்தம் வெற்­றி­கொள்­ளப்­பட்ட போதிலும் வடக்கு மக்கள் பல துன்­பங்­களை அனு­ப­வித்­தனர். தமது காணி­களை பறி­கொ­டுத்து அநாதைகளாகவே கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக வாழ்ந்­தனர்.

எனினும் இந்த ஆட்சியில் அவர்­களின் நிலங்­களை மீண்டும் அவர்­க­ளிடம் கைய­ளி­த்தமை அரசாங்கம் செய்த மிகப்­பெ­ரிய செய­லாகும். அதேபோல் ஒவ்­வொரு முறையும் வடக்கில் பொதுமக்­களை நினை­வு­கூர்ந்தால் இரா­ணு­வத்­தினால் அச்­சு­றுத்தப் படு­வதும் கைது செய்யப்படுவதுமே இடம்­பெறும். இது அந்த மக்­களின் உரி­மை­களை பறிக்கும் செய­லாகும். அவர்களின் உற­வு­க­ளுக்­காக விளக்­கேற்றி அனு­தாபம் தெரி­விப்­பது அவர்­களின் உரிமை. அதை அரசாங்­கத்­தினால் தடுக்க முடி­யாது.

ஆனால் விடு­தலைப் புலி­களை நினைவு கூரி வடக்கில் எந்த செயற்­பா­டு­களும் நடை­பெ­று­வது நாட்டில் மீண்டும் பிரச்­சி­னைகள் உரு­வாக சந்­தர்ப்­ப­மாக அமைந்­து­விடும். அதை மக்கள் உணர்ந்து செயற்­பட வேண்டும். ஒரு சில அமைப்­புக்­களை சேர்ந்­த­வர்கள் மீண்டும் நாட்டில் குழப்­பத்தை ஏற்படுத்த இவ்­வா­றான முயற்­சிப்­பார்கள். ஆனால் மக்கள் அதற்கு எந்த சந்­தர்­பத்­திலும் இடம் கொடுக்கக் கூடாது. தமிழ் மக்­க­ளுக்கும் சேர்த்தே இந்த பயங்­க­ர­வாதம் வெற்­றி­கொள்­ளப்­பட்­டது. இந்த வெற்­றியை தமிழ் மக்­களும் அனு­ப­விக்க வேண்டும்.

இந்த நாட்டில் இனி ஒரு சந்­தர்ப்­பத்திலும் இனப்­பி­ரச்­சினை தலைதூக்கக்கூடாது. இனவாத அரசியலுக்கு புதிய அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இனி இனவாதிகள் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்பதை மக்கள் ஆட்சியாளர்களுக்கு சொல்லிவிட்டனர்.எனவே வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் சம அளவில் மனித உரிமைகள் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டார்.