குழந்தையின் மருத்துவ கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் இலங்கை பெற்றோர்!!

234

வைத்தியசாலைக் கட்டணத்தை செலுத்த முடியாமல் இலங்கையை சேர்ந்த பெற்றோர் தமது பிள்ளையை வைத்தியசாலையில் இருந்து அழைத்துவர முடியாத பரிதாப நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.

இவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் மூன்று ஆண்டுகளாக தொழில் புரிந்து வருகின்றனர்.
குறித்த குழந்தையின் தாய் கருவுற்ற காரணத்தினால் பிரசவத்திற்கு இலங்கை செல்லவிருந்த போதிலும் குழந்தைக்கு 26 வாரங்களே ஆகியிருந்தன. இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் குழந்தையின் தாய் சுகவீனமுற்றார்.

இந்நிலையில் இலங்கை வராமல் குழந்தையையும், தாயையும் காப்பாற்ற வேண்டுமாயின் சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே குழந்தையுடன் தாய் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் வைத்தியசாலையில் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தினால் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். குழந்தையும் தாயும் 85 நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

குறித்த சந்தர்ப்பத்தில் தாய்க்கான மருத்துவ கட்டணத்தை காப்புறுதி நிறுவனம் செலுத்தியுள்ளது.

ஆயினும் குழந்தைக்கான வைத்தியசாலை கட்டணத்தை காப்புறுதி நிறுவனம் செலுத்துவதற்கான சலுகையில்லை என்பதால் குழந்தைக்கான மருத்துவ கட்டணத்தை இதுவரையிலும் செலுத்த முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தையின் மருத்துவ கட்டணம் 2 கோடியே 36 இலட்சத்து 57 ஆயிரத்து 32 ரூபாய் ஆகும். இத் தொகையினை செலுத்தி குழந்தையை மீட்டெடுப்பதற்கு பெற்றோர் உதவி கோருகின்றனர்.

11 12 13 14