வவுனியாவில் 25 வருடங்களுக்கு மேல் தாதியராக கடமையாற்றிய 4 தாதியர்கள் தமிழ் விருட்சத்தால் கௌரவிப்பு!!(படங்கள்)

434

சர்வதேச தாதியர் தினம் 12.05.2015 அன்று வவுனியாவில் 25 வருடங்களுக்கு மேல் தாதியராக கடமையாற்றிய ஓய்வு பெற்று வாழ்த்து வரும் 4 தாதியர்கள் அவர்களது வீட்டுக்கே சென்று தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பால் கௌரவிக்கபட்டனர் .

வவுனியா சூசைபிள்ளையார் குளத்தில் வசிக்கும் 36 வருட தாதியர் சேவையை வழங்கி ஓய்வு பெற்ற திருமதி. அருளம்மா மரியதாஸ் அவர்களும்,

வவுனியா யாழ் வீதியில் வசிக்கும் 28 வருட தாதியர் சேவையை வழங்கி ஓய்வு பெற்ற திருமதி. புஸ்பவதி மகேஸ்வரன் அவர்களும்,

வவுனியா கரப்பன்காட்டில் வசிக்கும் 27 வருட தாதியர் சேவையை வழங்கி ஓய்வு பெற்ற திருமதி. பரமேஸ்வரி ரங்கசாமி அவர்களும்,

வவுனியா குருமண்காட்டில் வசிக்கும் 38 வருட தாதியர் சேவையை வழங்கி ஓய்வு பெற்ற திருமதி. இராசமணி குருநாதர் அவர்களும்,

அவர்களது வீட்டுக்கே போய் தமிழ் விருட்சத்தால் கௌரவிக்கபட்டார்கள்.

இந்த கெளரவிப்பு நிகழ்வில், பிரதேச செயலாளர் திரு கா.உதயராசா, சுகாதார வைத்திய அதிகாரி Dr.லவன், Dr கிஷான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவநாதன் கிசோர், திரு.மா.ரோய், தேசமான்ய திரு.க.சிவஞானம், தாதிய பயிற்சி கல்லூரி அதிபர் திருமதி. எஸ். கருணைலிங்கம, Dr பிரசன்னா, உதவி பிரதேச செயலாளர் திருமதி எஸ்.கர்ணன், அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி து.நந்தீச்வரி, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டு நால்வரையும் கௌரவித்தனர்.

வவுனியாவில் நீண்ட காலம் சேவையாற்றி ஓய்வு பெற்று தாதியர் பல பேர் வாழ்ந்து வரும் நிலையில் முதற்கட்டமாக 4 பேரை அவர்களின் வீட்டுக்கே போய் கெளரவித்ததாகவும், மிகுதி பேர் அடுத்தடுத்த ஆண்டுகளில் கௌரவிக்க பட உள்ளதாகவும் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்) தெரிவித்தார்.

 20 2122 23 24 26 2728 29 30 31 3233 34 35 36 37