தீவிர கிரிக்கெட் பயிற்சி பெறும் டிராவிட்டின் வாரிசுகள்!!

433

Dravid

ட்ராவிட்டின் மகன்களான சமித் மற்றும் அன்வய் ஆகியோர் தீவிர கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இருவரும் கடந்த வெள்ளி அன்று மும்பையின் ப்ராபோர்ன் ஸ்டேடியத்தில் டைவ் அடித்து பயிற்சி செய்தது, பல சர்வதேச வீரர்களை திரும்பிப் பார்க்க வைத்தது. அவர்களில் ஒருவரான அவுஸ்திரேலிய வீரர் ’ஸ்டீவ் ஸ்மித்’ இருவருக்கும் சில கிரிக்கெட் டிப்ஸ்களை வழங்கியுள்ளார்.

அப்பா டிராவிட் தற்போது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு ஆலோசகராக இருப்பதால், அவருடன் சர்வதேச மைதானங்களை வலம் வந்து எப்போதும் கிரிக்கெட்..கிரிக்கெட்..கிரிக்கெட் என்று, இருவரும் கிரிக்கெட்டையே சுவாசித்து வருகின்றனர்.

ட்ராவிட் தன் 12ம் வயதிலிருந்து கிரிக்கெட் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். சமிதுக்கு வயது 9, அன்வய்க்கு வயது 6 என்பது குறிப்பிடத்தக்கது.