முள்ளிவாய்க்கால் நினைவுநாள் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றது.
வவுனியா, குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மாவட்ட அமைப்பாளர் சி.கோபாலகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் மதகுருமார், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.












