வவுனியாவில் ஒரே கிராமத்தில் 6 வீடுகள் மற்றும் கடை, கோவில் உடைக்கப்பட்டு திருட்டு!!(படங்கள்)

599

வவுனியா நெளுக்குளம் பாலாமைக்கல் கிராமத்தில் நேற்று(19.05) இரவு ஆறு வீடுகள், ஆலயம் மற்றும் கடை உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியா நெளுக்குளம் பாலாமைக்கல் கிராமத்தில் நேற்று ஆலயம் ஒன்றில் திருவிழா நடைபெற்றுள்ளது. திருவிழாவில் கலந்துகொண்ட மக்கள் அயர்ந்து உறங்கிய சந்தர்ப்பத்தில் சாமர்த்தியமாக செயற்பட்ட திருடர்கள் 6 வீடுகளில் கொள்ளையிட்டுள்ளனர். மேலும் ஒரு கடையும் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி ஆலயம் ஒன்றினது உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது. இக் கொள்ளைச் சம்பவங்களை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-பாஸ்கரன் கதீசன்-

1 02 2 3 4 5 7