இந்தியா- இலங்கை இறுதிப் போட்டியில் மைதானத்தில் போட்டில் வீசிய ரசிகருக்கு 5 ஆண்டுகால தடை!!

373

srilanka

இந்தியா-இலங்கை இடையேயான இறுதி கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்துக்குள் போட்டிலை வீசி எறிந்த ரசிகருக்கு டிரினாட் அண்ட் டொபாகோ கிரிக்கெட் வாரியம் 5 ஆண்டுகால தடை விதித்துள்ளது.

இந்தியா- இலங்கை இடையேயான இறுதிப் போட்டி கடந்த வியாழக்கிழமையன்று நடைபெற்றது. அப்போது விஜய் அவுடிம் என்பவர் போட்டிலை மைதானத்துக்குள் வீசிவிட்டு தப்பி ஓட முயன்றார்.

அந்த போட்டில் இலங்கை வீரர் மலிங்க மீது பட்டது. இதைத் தொடர்ந்து போட்டிலை வீசிய ரசிகரை கடுமையாக எச்சரித்திருக்கும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், அவர் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் நுழைய 5ஆண்டுகாலத்துக்கு அவருக்கு தடையும் விதித்திருக்கிறது.

கரீபியன் தீவுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் மேற்கொள்ளப்படும் முதலாவது ஒழுங்கு நடவடிக்கை இதுவாகும்.