ரணகளமாகிய யாழ் நீதிமன்றம் : 3 பொலிஸாா் காயம் : 20 பேர் கைது!!(படங்கள்)

355

புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதியில் ரயர்களை எரித்தமை மற்றும் சட்டத்தை மீறி செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, யாழ். நீதிமன்ற வளாகத்தில் நிலவிவரும் அசாதாரன நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிசார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது தாக்குதல்களை நிறுத்திக் கொள்ளாத காரணத்தினால் யாழ். நகரில் அமைதியின்மை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிலமையை கட்டுப்படுத்த பொலிஸாரின் சிறப்புப் படையணி வரவளைக்கப்பட்டு பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

யாழ். நீதிமன்றிற்கு முன்னால் பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரத்தினால் குறித்த பகுதியில் பெரும் பதற்றநிலை உருவாகியுள்ளது.

வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டதோடு, அவரையும் அவருக்கு உடந்தையாக இருந்த சட்டத்தரணி தமிழ்மாறனையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நீதிமன்றத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் வழிமறித்து இருமருங்கும் போடப்பட்டிருந்த மறியல்களை தகர்த்தெறிந்ததோடு, சிறைச்சாலை வாகனத்தையும் சேதமாக்கியுள்ளனர்.

மேலும் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்ட கல்வீச்சுத் தாக்குதலில் பொலிஸார் மூவர் காயத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 10 9812 13 14  18 19  1516