வவுனியாவில் நாளை புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து முழுநாள் கடையடைப்பு!!

470

vavuniya

புங்குடுதீவில் மாணவி‬ ‪‎வித்தியாவிற்கு‬ ‪‎நிகழ்ந்த‬ ‎கொடூரத்திற்கு‬ ‪‎எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம் (21.05) வர்த்தக சங்கத்தால் கடையடைப்பிற்கும், காலை 10 மணிக்கு வவுனியா பேரூந்து தரிப்பு நிலையத்தில் பேரணியும் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதாக வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு எஸ்.இராசலிங்கம் தெரிவித்திருந்தார்.

இவ் பேரணிக்கும் கடையடைப்பிற்கும் வவுனியாவில் பல்வேறு அமைப்பினரும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

அன்பான எம் இனிய உறவுகளே நாளை 21.05.2015 அன்று வவுனியா மாவட்டத்தில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கமும்,வவுனியா வர்த்தக சங்கமும் இணைந்து புங்குடுதீவில் மனிதநேயமற்ற முறையில் காடையர்களின் பிடியில் அகப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் எம் மண்ணில் உயிர் நீத்த மாணவிக்காகவும், அவரது குடும்பத்துக்கு நீதி வேண்டியும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டியும், இவ்வாறான கீழ்த்தரமான செயல்கள் இனியும் எம் உறவுகளுக்கு நடைபெறாமல் இருக்கவும் வேண்டி அத்தியாவசிய தேவைகள், பாடசாலை சேவைகள் தவிர்ந்த ஏனைய சகலரும் பூரண கடையடைப்பு கரிநாள் நிகழ்வையும்,

முச்சக்கரவண்டி பணிப் பகிஸ்கரிப்பினையும் நடத்துவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப் பட்டுள்ளது. எனவே அன்பானவர்களே இந்த ஏற்பாட்டுக்கு ஏனைய சங்கங்களையும், எம்மினிய உறவுகளையும், எம்முடன் சேர்ந்து ஆதரவு வழங்குமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.

இத்தகவலை உங்களுடைய உறவுகளுடனும், நண்பர்களுடனும்,
பகிர்ந்துகொள்ளவும்