
ஜோன் ஆபிரஹாம் தயாரித்து நடித்திருக்கும் புதிய படத்துக்கு ஜப்னா என்று பெயர் வைத்திருந்தனர். பிறகு மெட்ராஸ் கஃபே என பெயர் மாற்றப்பட்டது. இலங்கை யுத்தத்தின் பின்னணியில் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறதாம்.
இதில் இந்திய உளவுப்பிரிவின் அதிகாரியாக ஜோன் ஆபிரஹாம் நடித்திருக்கிறார். சர்வதேச பத்திரிகையாளராக நர்கீஸ் பக்ரி.
விக்கி டோனர் படத்தை இயக்கிய Shoojit Sircar மெட்ராஸ் கஃபேயை இயக்கியுள்ளார்.
நாயகன் இந்திய உளவுப்பரிவு அதிகாரியாக இருக்கும் படத்தில் இந்தியாவுக்கு சார்பானதாகவே காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். படத்தின் ரெய்லர் அதனை உறுதி செய்கிறது.
இந்தநிலையில் போரை நியாயப்படுத்தியும் போராளிகளை இழிவு செய்தும் காட்சிகள் இருப்பதாக சந்தேகம் உள்ளதாக தமிழீழ ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் அதே பெயரில், அதே ஆடையில் படத்தில் வருகிறார்களாம். இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதியும் அங்கு இருப்பதாக காட்சிகள் உள்ளன.
ஒகஸ்ட் 23 ல் படம் வெளியாகும் போது கடும் சர்ச்சைகள் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.





