வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்கள் புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!!(படங்கள், வீடியோ)

928

புங்குடுதீவில் மாணவி‬ ‪‎வித்தியாவிற்கு‬ ‪‎நிகழ்ந்த‬ ‎கொடூரத்திற்கு‬ ‪‎எதிர்ப்புத் தெரிவித்து இன்று (21.05) வவுனியாவில் பல்வேறு அமைப்புக்கள் தனியாகவும், குழுக்களாகவும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் ஒரு அங்கமாக வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்கள் A9 வீதியிலுள்ள விவசாயக் கல்லூரிக்கு முன்னால் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவண்ணம் கோசங்களையும் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை அறிந்து அவ்விடத்தில் பெருமளவிலான பொலிசார் குவிக்கப்பட்டனர். எனினும் எவ்வித வன்முறைகளுமின்றி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

-பாஸ்கரன் கதீசன்-

3031 32 33 3435 36 37 38 39