மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை!!

596

Court

பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து அனுராதபுரம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோரிவில – பளுகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2006ம் ஆண்டு ஜூன் 15ம் திகதி அனுராதபுரம் பகுதியில் 14 வயது பாடசாலை மாணவி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொர்பில் சந்தேகநபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கில் குற்றவாளியாக நிரூபனமான குறித்த ஆசிரியருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஒன்றறை இலட்சம் ரூபா நஸ்டஈடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.