கடைசியாக காதலிக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு இளைஞன் தற்கொலை!!

785

Sucide

குருநாகல், ஹொரதபொல பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ரணதுங்க முதலிகே தனுஷ்க ரொஷான் என்ற 21 வயதான இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த இளைஞனின் பெற்றோர் இருவரும் வெளிநாட்டில் பணி புரிந்து வருவதாகவும், அவர் தனது பாட்டியுடன் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர் இறப்பதற்கு முன்னர் குறித்த ஒரு இலக்கத்துக்கு ‘இனிய காலை வணக்கம்’ என குறுந்தகவல் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த இலக்கத்திலிருந்து தொடர்ச்சியாக இளைஞனின் கையடக்கத்தொலைபேசிக்கு குறுந்தகவல் மற்றும் அழைப்புகள் வந்த வண்ணமுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இலக்கம் உயிரிழந்த இளைஞனின் காதலியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் இது தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.