ஆண்கள் மீசை வைப்பது பெண்களுக்கு பிடிக்குமா, பிடிக்காதா?

736

MALE

என்னதான் இன்றைய இளைஞர்கள் மீசை இல்லாமல் சுற்றித் திரிந்தாலும், மீசையை விரும்பி வளர்க்கும் ஆண்களும் உண்டு. ஆனால் ஆண்கள் மீசை வளர்த்தால் பெண்களுக்கு பிடிக்குமா பிடிக்காதா என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

மீசை, ஆண்மையின் அடையாளமாய் நம் முன்னோர்கள் கூறுவார்கள். மீசை இல்லாதவர்கள் ஆண்களாகவே கருதப்பட மாட்டார்கள் அந்த காலத்தில்.

ஒரு பெண்ணுக்கு ஆணின் முகத்தைப் பார்த்தவுடன் முதலில் ஈர்ப்பது மீசைதான். காலம்காலமாக ஆண்களின் மீசையைப் பார்த்து, ரசித்தவர்கள்தான் நமது தமிழ் பெண்கள். மீசை என்பது ஆண்மையின் அடையாளங்களுள் முக்கியமான ஒன்று. ஒரு பெண் ஆணின்பால் ஈர்க்கப்படுவதற்கு உருவமும், ஆணின் செயல்பாடுகளும் முக்கிய காரணமாக இருக்கிறது. அதில், ஆணின் மீசைக்கும் பங்கு உள்ளது.

பொதுவாக தன்னிடம் இல்லாத ஒன்றை எதிர்பாலினரிடம் பார்க்கும்போது அது மனதை ஈர்க்கும் என்பது இயற்கை. எனவே, மீசை உள்ள ஆண்களைத்தான் பெரும்பாலான பெண்களுக்குப் பிடிக்கும் என்பதை இன்றைய இளைஞர்கள் உணருவதில்லை.

பொதுவாக வெளிநாடுகளில் ஆண்கள் மீசை இல்லாமல் இருக்கிறார்கள். அங்கே உள்ள பெண்கள் அதை சகஜமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதற்கு காரணம் பெண்கள் சிறு வயதில் இருந்தே, தந்தை, சகோதரர் உட்பட அனைத்து ஆண்களையும் மீசை இல்லாமல் பார்த்துப் பழகியதால் அங்குள்ள பெண்களுக்கு ஆண்கள் அப்படி இருப்பது சாதாரணமாகத் தெரியலாம்.

ஆனால் எம் தமிழர்களில் ஆண்களின் மீசைக்கு ஒரு பெரிய அடையாளம் இருக்கிறது. நம் தமிழர் பண்பாடு மீசையை ஆண்மையின் அடையாளமாக கொண்டது. தமிழ்ப் பெண்கள் இன்றும் ஆண்களின் மீசையை வெகுவாக ரசிக்கிறார்கள். மீசை என்பது ஆணுக்கு அழகு மட்டுமல்ல அடையாளமும் கூட. இயற்கையாக, இயல்பாக இருந்தாலே ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும்.

உருவம் மட்டுமில்லாமல் ஆண்களின் பேச்சு, குரல், நடை, கம்பீரம், உடல்வாகு, நேர்கொண்ட பார்வை, பெண்கள் அருகில் இருக்கும்போது, ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே ஒரு பெண் ஆணை ரசிக்கிறாள்.

கணவன் மனைவிக்கு இடையே உள்ள உறவிலும் மீசைக்கு பங்கு உள்ளது. எனவே, ஆண்கள் ஆண்களாக இருந்தாலே போதும். இயற்கையாக உள்ள ஆண்களின் அடையாளங்களைத் தொலைத்துவிடாமல் இயல்பாக இருந்தாலே பெண்கள் ஆண்களை ரசிப்பார்கள். ஆண்களின் வசம் ஈர்க்கப்படுவார்கள்.

பொதுவாக ஆண்களும் பெண்களும் சமம் என்பதை, ஆண்கள் உருவத்தில் மாற்றம் செய்து நிரூபிக்க முயற்சி செய்யாமல், பெண்களை நடத்தும் விதத்தில் காட்டினாலே போதும்.