6 நாட்களில் வசூலில் சாதனை படைத்த ஜோதிகாவின் 36 வயதினிலே!!

247

Jothika

ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘36 வயதினிலே‘ படத்தில் நடித்தார். இந்தப் படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்து ஹிட்டான ‘ஹவ் ஒல்டு ஆர்யு’ படத்தினை தமிழ் ரீமேக்காக இது வந்துள்ளது.

மஞ்சுவாரியர் கரக்டரில் ஜோதிகா நடித்தார். சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் தயாரித்தது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பெண்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக வருகின்றனர் என்றும் தெரிவித்தனர். கூடுதல் திரையரங்குகளில் இப் படம் தற்போது திரையிடப்பட்டு உள்ளது. ஸ்டுடியோ கிரீன் படநிறுவன தலைமை நிர்வாகி சக்திவேல் இதுகுறித்து கூறும் போது,

தமிழ்நாடு முழுவதும் 210 திரையரங்குகளில் 36 வயதினிலே படம் திரையிடப்பட்டது. 21ம் திகதி வரை 7 கோடி வசூல் ஈட்டியது என்றார். தற்போது அந்த தொகை 8 கோடியைத் தாண்டியுள்ளது.18 முதல் 20 கோடி வரை இந்த படம் வசூல் ஈட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.