மருதானை – எல்பிஸ்டன் அரங்கிற்கு அருகில் உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
தீ ஏற்பட்ட இடத்திற்கு 8 தீயணைப்பு வாகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டிடத்தின் ஹோட்டலில் முதலில் ஏற்பட்ட தீ பின்னர் ஏனைய கடைகளுக்கு பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.