1ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர் செல்வதி நடராஜா!!

1734

SELஅமரர் செல்வதி நடராஜா
மலர்வு : 8 ஒக்ரோபர் 1938 || உதிர்வு : 6 யூன் 2014
திதி : 27 மே 2015

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா குட்செட் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வதி நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

எம் குடும்பத்தின் குலவிளக்கே!
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
அன்பிற்கு இலக்கணமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்து எம்மை வழிநடத்திய
எங்கள் அன்புத் தெய்வமே!

ஆண்டது ஒன்றானாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எமை விட்டகலாது



ஓராண்டு காலமதில்
உமைப் பிரிந்து ஒரு பொழுதும்
உமை மறவாமல் நாம் இருந்தோம்

ஓயாது உம் குரல் இனிமை
எதிரொலிக்க ஒவ்வொரு கணமும்
நினைத்து நினைத்து அழுகின்றோம்

அம்மா என்றழைக்க அம்மா
நீங்கள் இல்லையே அடிமனதில்
வலி துடிக்க உயிரோடு வாழ்கின்றோம்!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

என்றென்றும் நீங்கா நினைவுடன் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரி, உறவினர்கள், நண்பர்கள்.

தகவல்
குடும்பத்தினர்