இணையத்தளங்களில் திருட்டுத்தனமாக வெளியான சூர்யாவின் மாசு திரைப்படம்!!

537

Maas

சூர்யா நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கும் படம் ‘மாசு என்கிற மாசிலாமணி’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். நயன்தாரா, சமுத்திரகனி, பார்த்திபன், பிரேம்ஜி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் இன்றுதான் இந்தியாவில் வெளியாகிறது. இருப்பினும், வெளிநாடுகளில் இப்படம் நேற்றே திரையிடப்பட்டது. இந்நிலையில், ‘மாசு’ முழுப்படத்தையும் திருட்டுத்தனமாக சிலர் இணையத்தளத்தில் உலாவவிட்டுள்ளனர்.

திரையரங்கில் இருந்து படத்தை திருட்டுத்தனமாக பதிவு செய்து இணையத்தளத்தில் உலாவவிட்டுள்ளனர்.

இந்தியாவில் வெளியாவதற்கு முன்பாகவே இணையத்தளத்தில் திருட்டுத்தனமாக வெளிவந்துள்ளது குறித்து மாசு படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, அந்த இணையத்தளங்களை முடக்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.