நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பு கோட்டை மத்திய ரயில் நிலையத்திற்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நேற்று மாலை 4 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. முன்னிலை சோஷலிசக் கட்சியின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள், சிறைகளிலுள்ள தமிழரசியல் கைதிகளின் பெற்றோர் மற்றும் சிவில் அமைப்புகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இப்போராட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிசலெனினிச கட்சியும் கலந்துகொண்டு ஆதரவை வழங்கியது.

















