வெடிமருந்து கடத்திய கிரிக்கெட் வீரர் கைது!!

247

Andre-Fletcher

வெடி­ மருந்து கடத்­தி­ய­தாக மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ட்ரூ ஃபிளெட்ச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்­கிந்­தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் அன்ட்ரூ பிளெட்ச்சர், தற்­போது டொமினிக்கா தீவில் உள்ள வின்ட்வேர்ட் ஐலண்ட் அணிக்­காக விளை­யாடி வரு­கிறார்.

இந்­நி­லையில் டொமி­னிக்­காவில் இருந்து மேற்கிந்­தி­யத் ­தீ­வு­க­ளுக்கு செல்ல அவர், அங்­குள்ள டக்ளஸ் விமா­ன­நி­லை­யத்­துக்கு சென்றார். அப்­போது அவரை சோத­னை­யிட்ட அதி­கா­ரிகள் ஃபிளெட்­சரின் பைகளில் வெடிமருந்து இருப்­பதை கண்­டு­பி­டித்­தனர்.

உட­ன­டி­யாக அவற்றை பறி­முதல் செய்த அதிகா­ரிகள் ஃபிளெட்­சரை கைது செய்து நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தினர். ஃபிளெட்­ச­ரிடம் இருந்து 50 கிலோ எடை­யுள்ள வெடி­ம­ருந்து கைப்­பற்­றப்­பட்­டன.

மேற்­கிந்­தியத் தீவுகள் அணிக்­காக அன்ட்ரூ ஃபிளெட்ச்சர் 15 ஒருநாள் போட்­டிகள் மற்றும் 22இரு­பது ஓவர் போட்­டி­களில் விளையாடியுள்ளார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.