வவுனியாவிலுள்ள ஒரு பாடசாலையில் பாடசாலை மாணவிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக 17 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இராஜாங்க கல்வியமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் அதிகரித்து வரும் பாடசாலை மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், மாணவிகள் மீதான இவ்வாறான பாலியல் வன்கொடுமைகள் பாடசாலைக்கு உள்ளேயும், வெளியேயும் இடம்பெற்று வருகின்றது.
ஆனால் அவற்றின் பெரும்பாலனவை உரிய முறையில் முறைப்பாடு செய்யப்படுவதிலலை. இதனால் பல சம்பவங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. எனினும் இது தொடர்பான முறைப்பாடுகள் தற்போது தொடர்ந்தும் கிடைத்து வருகின்றன.
இதனால் இவ்வாறான சம்பவங்கள் குறித்து பெற்றோர்கள், மாணவர்கள், அயலவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டும். இவ்வாறான பாலியல் வற்புறுத்தல், பாலியல் வல்லுறவுகளினால் மாணவிகள் பாரதூரமான நிலையமைக்கு தள்ளப்பட்டுள்கதாகவும் அவர் குறிப்பிட்டார்.






