வவுனியாவில் வாள், பொல்லுகளுடன் நடமாடிய 10 பேர் கைது!!

1177

Knif

வவுனியாவில் வாள், பொல்லுகளுடன் நடமாடிய 10 பேரை நேற்று இரவு வவுனியா பொலிசார் கைது செய்துள்ளனர்.

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் இருந்து வாகனம் ஒன்றில் வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா நோக்கி வந்த இளைஞர்களையும், சிறுவர் பூங்கா பகுதியில் வாள், பொல்லுகளுடன் நடமாடிய இளைஞர்களையும் அப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 10 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் .இருந்து வாள்கள், பொல்லுகள் என்பனவும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய வாகனம் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இரு குழுக்களுக்கு இடையில் மோதலுக்கு தயாராகிய போதே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

-அதிரடி-