கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் கைது!!

542

Arrest-logo

நோட்டன் பிரிட்ஜ் – கிரிவன்எலிய சிங்கள மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலையில் 10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை கண்டி வெரகல சிறுவர் இல்லத்தில் வைக்குமாறு ஹட்டன் பதில் நீதிவான் எஸ்.இராஜேந்திரன் உத்திரவிட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பாடசாலையில் தொடர்சியாக பல பொருட்கள் கொள்ளையிடப்படுவதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்தில் பாடசாலை அதிபரால் முறைபாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் பொலிஸார் பாடசலைக்கு சென்று விசாரணைகள் மேற்கொண்டதோடு சந்தேகத்தின் பேரில் 10 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் நான்கு மாணவர்களை நேற்று கைது செய்து ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.

இதன்போது குறித்த நான்கு சந்தேகநபர்களையும் கண்டி வெரகல சிறுவர் இல்லத்தில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை சந்தேகநபர்களான மாணவர்களின் வீட்டிலிருந்து கொள்ளையிடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.