வவுனியாவில் மறைந்த பிரபல ஆங்கில ஆசிரியர் சிவபாலன் ஞாபகார்த்த அஞ்சலிக் கூட்டம்!!

570

Sivapaalan

இலங்கையின் வடபுலத்தில் மதிப்புமிக்க பல்துறைப் பேராசானாகத் திகழ்ந்த அமரர் சுப்பிரமணியம் சிவபாலன் அவர்களின் ஞாபகார்த்த அஞ்சலிக் கூட்டமொன்றை நடாத்துவதற்கு வவுனியா ஆங்கிலச் சங்கமும் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.

மேற்படி கூட்டமானது வவுனியா ஆங்கிலச் சங்கத்தின் செயலாளரும் வவுனியா கலை இலக்கிய நண்பரகள் வட்டத்தின் செயலாளருமான கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் (சிரேஸ்ர விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அவர்களின் தலைமையில் வவனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் 02.06.2015 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 09.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வுக்கு சமயப் பெரியார்கள், கல்வியியலாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஏனைய சமூக நலன் விரும்பிகள், அமரரது உறவினர்கள், நண்பர்கள் எனப் பலர் வருகைதந்து சிறப்பிக்கவுள்ளனர்.

-பாஸ்கரன் கதீஷன்-