வவுனியாவில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக அமைதிவழிப் போராட்டம்!!(படங்கள்)

775

நாடெங்கிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிராக தொடர்ச்சியாக இடம்பெறும் வன்முறைகளுக்கு நீதிவேண்டி நாடெங்கிலும் இன்று அமைதிப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு அங்கமாக இன்று(01.06.2015) வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்னால் தேசிய பெண்கள் அமைப்புடன் இணைந்து பிரதேச மக்கள் வாயினை கறுப்புத் துணியால் கட்டி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய மக்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய தினத்தில் வடக்கு, கிழக்கு, கொழும்பு உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் இவ் அமைதிவழிப் போராட்டம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-பாஸ்கரன் கதீசன்-

1 02 2 03 04 4 5 06 6 7 8 9 10