வித்தியா கொலை மற்றும் நீதிமன்ற தாக்குதல் சந்தேகநபர்கள் 52 பேர் நீதிமன்றில் ஆஜர்!!

500

Jaffna

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 9 பேர் இன்று ஊர்காவல்துறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

மேலும் யாழ். நீதிமன்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட 43 சந்தேகநபர்களும் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். இந்நிலையில் இரு நீதிமன்றங்களின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 14ம், 17ம், 19ம் திகதிகளில் வித்தியா படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களில் 3 சந்தேகநபர்களுக்கு 2ம் தடவையாக 6ம் மாதம் முதலாம் திகதிக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டதுடன், மற்றைய 6 சந்தேகநபர்களுக்கும் முதற்தடவையாக 6ம் மாதம் முதலாம் திகதி வரையில் விளக்கமறியல் வழங்கப்பட்டது.

இதேவேளை கடந்த 20ம் திகதி நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவத்தில் 129 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதில் 43 சந்தேகநபர்களுக்கு 6 ம் மாதம் முதலாம் திகதி வரையில் விளக்க மறியல் உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. குறித்த 43 சந்தேகநபர்களே நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வன்முறைக்கு காரணம் என பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்நிலையில் இந்த 43 சந்தேகநபர்களும் இன்று யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.