வாக்காளர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் விழிப்புணர்வு பேரணியொன்று இன்று (01.06) திங்கட்கிழமை இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட செயலகத்தின் தேர்தல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப் பேரணியில் வாக்காளர்களாக மக்கள் தம்மை பதிவு செய்து கொள்ளவேண்டும் எனவும் வாக்குரிமை அனைவரதும் உரிமை என்பதனையும் வலிறுத்தி வழிப்புணர்வுப் பேரணி இடம்பெற்றிருந்தது.
மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இருந்து ஆரம்பமான இந்த விழிப்புணர்வு பேரணி வவுனியா நகர வீதிகள் வழியாக நகரசபை மண்டபத்தை சென்றடைந்து அங்கு விசேட கூட்டம் இடம்பெற்றது.
இந்த வருடத்திற்கான வாக்காளர் பதிவு இடம்பெற்று வரும் நிலையில் இடம்பெற்ற இவ் விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட செயலக ஊழியா்கள் கிராம சேவகர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.-
-பாஸ்கரன் கதீசன்-






