வவுனியா கோவில் குளத்தில் மானுட விழுதுகள் என்னும் தொண்டுநிறுவனம் உதயமாகி அதன் அறிமுக நிகழ்வினை கோவில்குளம் கிராமத்தின் கிராமசேவையாளர் தலைமையில் கோவில்குளம் கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் நேற்றைய தினம் (31.05.2015) நடாத்தியிருந்தது. மேற்படி மானுடத்தின் விழுதுகள் மன்றமானது
- நிவாரணம் மீள்கட்டுமானம்
- பெண்கள் மற்றும் இளையோர்
- பால்நிலை விருத்தி
- சுற்றுசூழல் பாதுகாப்பு
- அபிவிருத்தி வழிகாட்டல்
என்னும் ஐந்து குறிக்கோள்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது .நேற்றைய அறிமுக நிகழ்வில் மானுட விழுதுகள் மன்றத்தை சேர்ந்த சரவணமுத்து அரவிந்தன் அவர்கள் கலந்து கொண்டு கோவில்குளம் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் மாதர் சங்கம் இளைஞர் சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் மன்றத்தின் செயலபாடுகள் தொடர்பான அறிமுகத்தை வழங்கினார் .