சீன கப்பல் விபத்தில் 400 பேர் வரை மாயம்!!

336

China

சீனாவில் 450க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் புயலில் சிக்கி யாங்சே நதியில் மூழ்கியது. இதுவரை கப்பல் மாலுமி மற்றும் பொறியாளர் உள்பட 20 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து மோசமான வானிலை நிலவி வருவதால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், விபத்து நடந்த இடத்திற்கு பிரதமர் லீ கெகியாங் விரைந்துள்ளதாகவும் XINHUA செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

விபத்துக்குள்ளான EASTERN STAR பயணிகள் கப்பலில் 50 முதல் 80 வயதிற்குட்பட்ட 406 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 47 பணியாளர்கள் உள்ளிட்டோர் பயணம் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நான்ஜிங் பிராந்தியத்தில் இருந்து சீனாவின் ஜியாங்ஸூ பிராந்தியம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கப்பல் யாங்சே ஆற்றின் JIANLI பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது புயலில் சிக்கி மூழ்கியது.

WebADD