கர்ப்பமான காரணத்திற்காக பெண்ணின் வேலையை பறித்த நிறுவனம்!!

306

Prag

அமெரிக்காவில் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த வந்த பெண் ஒருவர் கர்ப்பமடைந்த காரணத்திற்காக அவருடை வேலையை பறித்த நிறுவனத்தை கண்டித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள Houston நகரில் United Bible Fellowship Ministries என்ற பெயருடைய தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

ஏழைகள், வீடுகள் இல்லாதவர்கள் மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது உள்ளிட்ட சேவைகளை இந்த தொண்டு நிறுவனம் செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள், ‘பணி காலத்தில் கர்ப்பம் அடையக்கூடாது’ என்ற விதிமுறையை நிர்வாகிகள் கட்டுப்பாட்டுடன் பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இதே நிறுவனத்தில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வந்த Sharmira Johnson என்ற பெண் கர்ப்பமடைந்துள்ளார். நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி பணி காலத்தில் கர்ப்பம் அடைந்தது குற்றம் எனக்கூறி நிர்வாகம் அவருடைய பணியை பறித்தது.

விதிமுறையை மீறி கர்ப்பம் தரித்த ஒரே காரணத்திற்காக தான் அவரை பணியிலிருந்து நீக்குவதாக வெளிப்படையாகவே நிறுவனம் அறிவித்ததுடன் அந்த பெண்ணிற்கான எந்த இழப்பீட்டையும் வழங்கவில்லை.

கர்ப்பம் தரித்த ஒரே காரணத்திற்காக தனது பணியை பரித்து அநீதி இழக்கப்பட்டிருக்கிறது என அந்த பெண் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு டெக்சாஸில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்தபோது, நீதிபதியான Vanessa D. Gilmore, நிறுவனத்தின் நடவடிக்கையை வன்மையாக கண்டித்துள்ளார்.

கர்ப்பமான பெண்ணை பணியிலிருந்து நீக்கியதன் மூலம் அந்த நிறுவனம் மனித உரிமைகள் சட்டத்தை மீறியுள்ளதாகவும், அலுவலகங்களில் பணி செய்யும் ஊழியர்களுடன் பாகுபாட்டுடன் செயல்பட்டுள்ளதாக நீதிபதி கண்டித்தார்.

இதற்கு பதிலளித்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள், பிறக்கப் போகும் குழந்தைக்கும் அதன் தாயாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக பணியிலிருந்து நீக்கியதாக விளக்கம் அளித்தனர்.

ஆனால் இந்த விளக்கத்தை ஏற்காத நீதிபதி, ஒரு அலுவலகம், நிறுவனம் அல்லது அமைப்பில் பணிபுரியும் ஊழியர்களிடன் வயது, இனம், மொழி, நாட்டுடமை மற்றும் உடல் ஊனமுற்றத்தன்மை உள்ளிட்ட எந்த பாகுபாட்டையும் பார்க்காமல் சமமாக நடத்த வேண்டும்.

ஆனால், இந்த தொண்டு நிறுவனம் அரசின் அடிப்படை மனித உரிமைகள் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளதால், இதனால் பாதிப்படைந்த கர்ப்பிணி பெண்ணிற்கு சுமார் 75 ஆயிரம் டொலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.1