பிறந்த சில வாரங்களிலேயே ஒரு வயது குழந்தையை போல் தோன்றும் அதிசயக் குழந்தை!!

854

பிரித்தானியாவில் பிறந்து சில வாரமே ஆன குழந்தை ஒன்று அசுர வேகத்தில் வளர்வதை கண்டு அதன் பெற்றோர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

பிரித்தானியாவின் கெண்டில் (Kent) உள்ள கெண்டர்பரி(CanderBury) பகுதியை சேர்ந்தவர்கள் பென் கேஸ்டில் (Ben Castle) மற்றும் டயானா(Dayana) தம்பதி. இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு அவர்கள் ஜேக் ஸ்டென்லி(Jack Stanley) என்று பெயர் வைத்தனர்.

இந்நிலையில் குழந்தை பிறந்து 10 வாரங்கள் ஆனதால் அதன் எடையை சரி பார்த்தனர். குழந்தை 7கிலோ எடையும் 63 செமீ உயரமும் இருந்ததை கண்டு அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். மேலும் பிறந்து 10 வாரங்களே ஆன தங்கள் குழந்தை 1 வயது குழந்தைக்கு உடைய வளர்ச்சியில் இருந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி குழந்தையின் தாய் டயானா கூறுகையில், முதலில் வயிற்றில் மூன்று குழந்தைகள் இருப்பதாகவே அனைவரும் நினைத்தோம். ஜேக் பிறந்தவுடன் அவனின் வளர்ச்சியை பார்த்து மருத்துவர்கள் பிரமிப்படைந்தனர்.

அவனின் வளர்ச்சிக்கான காரணம் மருத்துவர்களுக்கு இன்னமும் தெரியவில்லை என்று தெரிவித்தார்.மேலும் பிரித்தானியாவிலேயே பெரிய குழந்தையை பெற்றிருக்கிறேன் என்று நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

B B1