காதலியை கொலை செய்த காதலனை போஸ்டர் அடித்துத் தேடும் பொலிஸ்!!

719

Poster

சென்னையில் காதலியை கொலை செய்த காதலனை பிடிக்க, அவரது விவரங்கள் அடங்கிய 20 ஆயிரம் போஸ்டர்களை பொலிசார் ஒட்டியுள்ளனர்.

சென்னை சூளை சட்டண்ணன் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகள் அருணா (22), கீழ்ப்பாக்கம் தலைமைச் செயலக காலனியைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞரைக் காதலித்து வந்தார்.

கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி தினேஷை அவரது வீட்டுக்கு பார்க்கச் சென்ற அருணாவை தினேஷ் கொலை செய்தார். அருணாவின் உடலை காரில் எடுத்துச் சென்று மறைக்க முயற்சி செய்தபோது குடியிருப்பின் காவலாளி பார்த்ததால் உடலுடன் காரை அப்படியே விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

தினேஷை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர், இந்நிலையில், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற இடங்களில், தினேஷை தேடப்படும் குற்றவாளி என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்களிலும் தினேஷின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 20 ஆயிரம் போஸ்டர்களை ஒட்டியிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.