கொச்சிக்கடை புனித அத்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று புதன்கிழமை 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
இன்று காலை 6.00 மணிக்கு தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் திருப்பலி ஆராதனைகள் நடத்தப்பட்டு பின்னர் கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது.
அந்த வகையில் எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை வரை தினமும் மாலை 6.00 மணிக்கு ஆராதனைகள் நடைபெறவுள்ளன.
எதிர்வரும் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் மும்மொழிகளிலும் வெஸ்பர் ஆராதனை நடைபெறும். 13ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 4.00, 5.00 மற்றும் 6.00 மணிக்கு திருப்பலிகள் இடம்பெறவுள்ளன.
காலை 8.00 மற்றும் 10.00 மணிக்கும் நண்பகல் 12.00 மணிக்கும் தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகளில் விசேட திருவிழா திருப்பலிகள் நடைபெறும். மாலை 5.30 மணிக்கு புனித அந்தோனியார் திருச்சொரூப பவனி ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமாகும். திருச்சொரூப பவனி முடிவில் விசேட ஆசீர்வாதம் இடம்பெறவுள்ளது.






