வவுனியாவில் நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!(படங்கள்)

1505

 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா பஸ்நிலையப் பகுதியில் நடந்த விடயம் மேலைத்தேய நாடுகளில் விலங்குகளுக்கு இருக்கும் பெறுமதி கூட எமது நாட்டில் மனிதர்களுக்கு இல்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

வவுனியா பஸ்நிலையப் பகுதியில் முதியவர் ஒருவர் குப்பைத் தொட்டியைக் கிளரி பழுதடைந்த உணவுகளைச் சாப்பிடத் தொடங்கியுள்ளார் இதனை எதேர்ச்சையாகப் பார்த்த வவுனியா வரியிறுப்பாளர் சங்கத் தலைவர் சந்திரகுமார் அவர்கள் அம் முதியவரிடம் சென்று அவ் உணவை எறியும்படிக் கூறி சாப்பாடும், தண்ணீரும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இது தான் அவரது வாழ்க்கை எனவும், அவர் மனநிலை பாதிக்கபட்டவர் எனவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற பலர் எம் சமூகத்தில் இருக்கின்றனர். இவர்களும் எம் சமூகத்தின் அங்கம் என்ற வகையில் இவர்களின் இந்த அவல வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைக்கவேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இவர்களுக்காக எம்மால் முடிந்ததை செய்வோம்.

இச் செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..

1 2 3 4 5

WebADD