பாதுக்காப்பு இன்றி சாதாரண பிரஜைபோல் காலணிக் கடைக்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரி!!(படங்கள்)

549

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பிலுள்ள பாதணிக் கடைக்கு பாதணிகளை கொள்வனவு செய்வதற்காக சென்றுள்ளார்.

அவர், சாதாரண ஆசனத்தில் அமர்ந்திருந்து பாதணிகளை தெரிவுசெய்துள்ளார். பாதணிக் கடையின் பணியாளர்கள் பாதணிகளை ஜனாதிபதியின் அருகில் வைத்துள்ளனர்.

பாதணி கடைக்கு ஜனாதிபதி சென்றபோது பாதுகாப்பு தரப்பினர் அவருடன் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வீதிகளும் மூடப்படவில்லை மற்றும் தடைசெய்யப்பட வலயமாக பிரகடனப்படுத்தப்படவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்புகைப்படம் அக்கடையில் சேவை புரியும் ஊழியர் ஒருவரினால் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1 2 3