கொழும்பு பிரபல பாடசாலை நீச்சல் தடாகத்தில் பழைய மாணவரின் சடலம்!!

614

Body

கொழும்பு பிரபல பாடசாலை ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து அப்பாடசாலையின் பழைய மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் இன்று (03.06) அதிகாலை மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. எனினும் சில நாட்களாக அவர் மனவேதனையில் இருந்துள்ளதாக தெரியவருகிறது.

மஹரகம நாவின்ன பகுதியைச் சேர்ந்த 50 வயது நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.