முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்!!(படங்கள்)

801

முல்லைத்தீவிலிருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேரூந்து ஒன்று புதுக்குடியிருப்பிலிருந்து முல்லைத்தீவு நோக்கி வந்து கொண்டிருந்த வாகனத்துடன் மோதியதுடன் மோட்டார் வண்டியுடனும் மோதி வீதியோரத்திலிருந்த பனைமரத்துடன் மோதியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் காயமடைந்துள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டவைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை பேரூந்தின் சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

photo 1 photo 2 photo 3 photo 4