அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஐ.சி.சி. நடுவர் ஸ்டீவ் டேவிஸ். 63 வயதான இவர் நியூசிலாந்து– இங்கிலாந்து தொடரோடு நடுவர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மிகவும் கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஸ்டீவ் டேவிஸ் 25 ஆண்டு காலம் நடுவராக பணியாற்றி உள்ளார். 2002ஆம் ஆண்டு ஐ.சி.சி. நடுவரானார். 2008 ஆம் ஆண்டு எலைட் பேனலில் இடம் பெற் றார்.
2007, 2011, 2015 உலகக்கிண்ணம் மற்றும் ஐந்து 20 ஓவர் உலகக்கிண்ணம், இரண்டு சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் நடுவராக பணியாற்றி உள்ளார். 57 டெஸ்ட், 135 ஒருநாள் போட்டி மற்றும் 26 இருபது ஓவர் போட்டிகளில் நடுவராக இருந்துள்ளார்.






